நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலய தரம் 1 இற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தில் 16.01.2014 அன்று காலை தரம் ஒன்றிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் கலந்து கொண்டு கொண்டார்.



இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் இந்த பாடசாலையில் தரம்01 ற்கான மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இங்கு வருகை தந்துள்ளனர். மாணவர் ஒவ்வொருவரது பெற்றோர் மனதிலும் இன்று எவ்வளவு எதிர் பார்ப்புகள் இருக்கும் என்பது எனக்கு தெரியும் நானும் எனது பிள்ளைகளை தரம் 01ற்கு சேர்க்கும் முதல் நாள் எவ்வளவு சந்தோஷத்துடனும் எதிர்பார்போடும் தான் இருந்தேன் ஒவ்வொரு பிள்ளையும் படித்து நல்ல முன்னேற்றம் அடையவேண்டும் என்பதே எல்லா தாய் தந்தைகளுன்னும் ஆசை இவ்வளவு காலமும் பாலர் பாடசாலையிலும் தங்களுடனும் இருந்த தங்களது குழந்தைகள் இன்று பெரிய பாடசாலைக்கு வந்துள்ளனர் இவர்களின் முன்னேற்றத்தில் அதிபர் ஆசிரியர்களின் பங்கு போதுமானதாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த மாணவர்களின் முன்னேற்றத்தினால் தாய் தந்தையருக்கு மட்டுமல்ல இந்த பாடசாலை, இந்த கிராமம் அதிபர், ஆசிரியர்களுக்கும் பெருமை ஏற்படுவதையும் குறிப்பிட விரும்புகின்றேன். இந்த பாடசாலை எனது கிராமத்தில் இருப்பது எனக்கும் பெருமையாகவே இருக்கின்றது. ஏற்கனவே என்னால் இந்த பாடசாலைக்கு உதவிகளை வழங்கியிருந்தேன். எதிர்காலத்திலும் என்னாலான உதவிகளைச் செய்வேன் எனவும் குறிப்பிட்டார்.