மலர்ந்திருக்கும் புதுவருடம் - 2014 ஐ வரவேற்கும் நள்ளிரவு ஆராதனை நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.
மனித உரிமைகள் அண்டு- 2014 மட்டக்களப்பு மறைமாவட்டம் என்ற மகுட வாசகம் பொருந்திய பதாதை மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையாவினால் தேவாலய நுளைவாயிலில் முதல் நிகழ்வாக திரைநீக்கம் செய்யப்பட்டது.
நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு தேவாலயங்களில் மணியோசை ஓலிக்க நகரில் பட்டாசசுகளின் முழக்கத்தின் மத்தியில் தேவாலய பாடல் குழுவினரால் புதுவருடத்தை வரவேற்கும் பாடல் பாடப்பட்டன.
ஆயர் தலைமையில் தேவாலய பங்குத்தந்தை ஜே. எஸ். மோறாயஸ், உதவிப் பங்குத் தந்தை எக்ஸ். எஸ். ரவிகாந் இணைந்து புதுவருடத்தை வரவேற்கும் ஆராதனையில் ஈடுபட்டனர்.












