(வரதன், சுரேந்திக்கா & மா.சசி)மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் அப் பிரதேசத்திலுள்ள சமூககமட்ட அமைப்புக்களும் இணைந்து இன்று 21ம் திகதி பொங்கல் விழாவினை நடாத்தினர்.
இந் நிகழ்வு பிரதேச செயலாளர் வெ.தவராஜா அவர்களின் ஏற்பாட்டில் செயற்படுத்தப்பட்டது. இப் பொங்கல் விழாவில் 30 பொங்கல் பானைகள் வைத்து பொங்கும் நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றது.
இப் பிரதேச செயலகத்தில் இவ்வாறான பொங்கல் விழா நிகழ்வு இதுவே முதற்தடவையாக நிகழ்தப்பட்டது. இவ் விழாவில் கிராமங்களிலுள்ள சமூகமட்ட அமைப்புக்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மிக ஒற்றுமையாக சேர்ந்து பொங்கல் பொங்கியமை மிக சிறப்பம்சமாக இருந்தது.
மேலும் இதன்போது, உழவர் பாடல்கள்,பொங்கல் பற்றிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்செல்வன் அவர்களும் கலந்து இவ் விழாபற்றி சிறப்புரை ஆற்றினார்.
இதன்போது இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர் கழகங்கள் சிலவற்றிற்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இளைஞர் கழகங்கள் சிலவற்றிற்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.































