4050 பேருக்கு விரைவில் கிராம உத்தியோகத்தர் நியமனம்

  4050 கிராம உத்தியோகத்தர்களுக்கு  விரைவில் நியமனம்  வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது .
கடந்த வருடம் இடம்பெற்ற போட்டி பரீட்சையில் தகுதி பெற்றவர்கள் இதற்கு தெரிவுசெய்ய பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பி.பி அபயக்கோன் தெரிவித்துள்ளார் .
அவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் சில வாரங்களுக்குள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார் .

புதிய உத்தியோகத்தர்களுக்கு பிரச்சனைகளை அடையாளம் காண்பது தொடர்பில் பயிற்சிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் பி.பி அபயக்கோன் தெரிவித்துள்ளார் .