(மா.சசி)
ஏறாவூரின் பின்தங்கிய பகுதியான மிச் நகர் கிராமத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் 160 மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்;கப்பட்டதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இளைஞர் கழகத்தின் செயலாளர் ஜே.எம். அஸீம் தெரிவித்தார்.
மிச் நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் ஏ. அமீன் தலைமையில் நிகழ்வு நேற்று புதன் மாலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ், ஏறாவூர் சமூக நல்லிணக்கம் மற்றும் வலுவூட்டலுக்கான அமைப்பின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நஸீர், ஏறாவூர் நகரசபை பிரதித் தவிசாளர் எம்.எல்;. தஸ்லீம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இளைஞர் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களும் பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வர்த்தகர்களிடமும் தனவந்தர்களிடமும் சேகரித்த நிதியைக் கொண்டே தாங்கள் இவ்வாறு இலவசமாக கற்றல் உபகரணங்களை வழங்கியதாக அமைப்பின் பொருளாளார் எச்.பி.எம். இப்திகார் நிகழ்வில் தெரிவித்தார்.












