(சிவம்)
மட்டக்களப்பு மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் சட்டவிரோதமான முறையில் வளர்க்கப்ட்ட4 மற்றும் 5 அடி உயரமான 70 கஞ்சா செடிகளை கிடைக்கப்பபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
மாவட்டத்தின் யானைகள் உள்ள வட்டவான் மற்றும் சிறுதேன்கல் ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை நடாத்திய தேடுதலில் சோளச் சேனையினுள் வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகள் சுமார் 20 இலட்சம் பெறுமதியானதென மதுவரி அத்தியட்சகர் என். சுசாகரன் தெரிவித்தார்.
சந்தேகத்தின் பெயரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
காட்டில் யானைகளின் அச்சுறுத்தலினால் முழுச் செடிகளையும் கைப்பற்ற முடியாமல் போனது என அவர் மேலும் தெரிவித்தார்.
மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கே.ஜி.எம். பண்டார மற்றும் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ். தங்கராசா அவர்களின் வழிகாட்டலின் கீழ் பரிசோதகர்களான ஆர்.எஸ். கே. ரணசிங்க, டி.பி. அலவத்தகமகே, ஏ. ஆனந்தநாயகம், சார்ஜன்ட் எஸ். ஜனாந்தன் மற்றும் அகாரிகளான கே. ரமேஸ்குமார், எஸ். செல்வராசா,எஸ். ஜெயக்குமார், எம். ஐ. அன்வர், டபிள்யு.எம்.கே. வர்ணசூரிய மற்றும் கே. செந்தில்வண்ணன் ஆகியோர் இத் தேடுதலில் பங்கேற்றனர்.