(மா.சசி)
திருகோணமலையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல கவிஞரும் எழுத்தாளரும் “மகுடம்” சஞ்சிகையின் ஆசிரியருமான வி.மைக்கல் கொலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சமாதான நீதிவானாக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் முன் நிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
கிழக்குப் பல்கலைக்கழக வியாபார நிர்வாகமாணி (BBA) பட்டதாரியான இவர் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.
திருகோணமலையைச் சேர்ந்த வில்பிரட் பெர்ணாண்டோ – சிறியபுஸ்பம் தம்பதியரின் புதல்வரான இவர் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் பழைய மாணவரும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளி வந்த “தினக்கதிர்” வார வெளியீட்டின் பிரதம ஆசிரியருமாவார்.

.jpg)