கொழும் இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட மட்டக்களப்பு அரங்க ஆற்றுகை நிலையத்தின் மாணவர்களின் “இராவணேசன் நாட்டிய நாடகம்” பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறையின் முன்னாள் பீடாதிபதியும் மட்டக்களப்பு அரங்க ஆற்றுகை நிலையத்தின் நிறுவுனருமான பேராசிரியர் எஸ்.மௌனகுருவின் நெறியாழ்கையின் கீழ் இந்த நாட்டிய நாடகம் உருவாக்கபட்டு மேடையேற்றப்பட்டு வருகின்றது.
இதன் கீழ் கடந்த 05.01.2014 அன்று கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் பெருந்திரளான கலையார்வலர்கள் முன்னிலையில் இந்த நாட்டிய நாடகம் மேடையேற்றப்பட்டது.
இதன்போது இந்த நாட்டிய நாடகம பெரும் வரவேற்பு வழங்கப்பட்டதுடன், நிறைவுக் காட்சியினைத் தொடர்ந்து பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோசம் செய்து தமது வாழ்;தினைத் தெரிவித்ததானது அந்த மேடை நாட்டிய நாடகத்தின் தன்மையினை பறைசாற்றி நிற்கின்றது. என்பதனை எடுத்துக் காட்டியது.
மிகவும் சிறப்பு மிக்க மேடை அலங்காரம் வினைத்திறன் மிக்க கலைஞர்களின் படைப்பு, இவைகள் அனைத்தும் அனைவரையும் ஈர்ப்புக்குள்ளாக்கியது.
இராவணேசன் மட்டக்களப்பின் கலைப்பெருமையினை உலெகெங்கும் கொண்டு செல்வதானது மிகவும் வரவேற்கத்தக்கது என கலையார்வலர்கள் கருதுகின்றனர்.























