உ.ஜெஷோமிகா)
ஆரையம்பதி பிரதேச கல்வி நிலையினை மேம்படுத்தும் நோக்கோடு செல்வாநகர்,செல்வாநகர் கிழக்கு, ஆரையம்பதி கிழக்கு கிராம சேவகர்பிரிவுகளை உள்ளடக்கியதான புதிய முன்மாதிரியான கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிமனை, ஆற்றல்பேரவை, பொலிஸ் நிலையம், மக்கள் தொடர்புப் பணிமனை ஆகியன இணைந்து முன்னேடுக்க உள்ளது.
அதற்கான ஆரம்ப தெளிவுபடுத்தல் கூட்டமானது ஆரையம்டபதி செல்வாநகர் சிவா வித்தியாலய அதிபர் மற்றும் ஆரையம்பதி கிழக்கு நவரெட்ணராஜா வித்தியாலய அதிபர் திரு.தேவலிங்கம் ஆகியோரின் தலைமையில் இரு பாடசாலைகளிலும் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திரு.வாசுதேவன் மாவட்ட வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுபாச்சக்கரவத்தி முன்னால் கிழக்க மாகாணசபை உறுப்பினரும் ஆற்றல் பேரவைத் தலைவருமான பூ.பிரசாந்தன் சமுக சார் அமைப்புக்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.












