(உ.ஜெஷோமிக்கா)
மட்டக்களப்பு மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களை வெள்ள பெருக்கு, நுளம்பு பெருக்கம், நகரை அழகுபடுத்தல் போன்ற திட்டங்களிற்கமைவாக கல்லடி முகத்துவாரம் , கல்லடி, கல்லடி வேலூர் ஆகிய கிராமங்களிநூடாக ஊடறுத்து செல்லும் பாரிய வடிகானினை சிரமதானம் மூலமாக சுத்தம் செய்யும் நடவடிக்கை நாளை (25) சனிக்கிழமை, கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தருகில் காலை 8.00 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வானது மாநகர ஆணையாளர் எம்.உதயகுமாரின் ஆலோசனைக்கு அமைவாக கல்லடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையில் நடைபெறவுள்ளது.
சிரமதான நிகழ்வில் கல்லடி இராணுவ , கடற்படை அதிகாரிகளும், காத்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர்களும் , கிராம உத்தியோகத்தர்களும், கிராம அபிவிருத்திச்சங்க , மாதர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களும் , சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் சமுர்த்தி சங்கங்கள் ஆகியனவும் கலந்துகொள்ளவுள்ளதுடன், கிராம மக்களையும் இந் நிகழ்வில் கலந்து பங்களிப்புக்களை வழங்கியுதவுமாறு பொது சுகாதார பரிசோதகர் அழைப்புவிடுக்கின்றார்.













