(வரதன்)தூய்மைவாரத்தை முன்னிட்டு பொதுச்சுகாதார உத்தியோகத்தர் தேவநேசன் தலைமையில் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய பாலத்தடியில் போக்குவரத்துக்கு இடையூறாகவிருந்த சட்டவிரோத மீன் வியாபாரிகள் மீது மாநகர சபையினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக அதிகளவிலான வியாபாரிகள் இப்பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர் .இதனால் விபத்துக்கள் ஏற்பட காரணமாக இருந்த இவர்கள் மீது மாநகர சபை ஆணையாளரின்
உத்தரவுக்கமைய சகல விற்பனையாளர்களும் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டனர்
மாநகர சபைப் பொறியியலாளர் பா.அச்சுதன் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.பிரான்சிஸ் மேற்பார்வையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புதிய ஆணையாளரின் இவ் நற்செயல்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.

















