(வரதன்)மணற்பிட்டி அம்பிளாந்துறை ஆகிய இடங்களில் மேற் கொள்ளப்பட்ட வீதிச் சோதனையின் போது 2இலட்சம் ரூபா பெறுமதிமிக்க மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன. மேலதிக விசாரணைகளின் பின் குற்றவாளிகளுக்கெதிராக களுவாஞ்சுகுடி நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எ.தூசார தெரிவித்தார்.
சாஜன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸ் அதிகாரி குழுவினரால் இவ் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.
கொக்கட்டிச்சோலை பொலிசாரால் சட்ட விரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டது
















