(உ.உதயகாந்த்)
சர்வதேச ரீதியாக
நுண்நிதியியல் பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் ஆறு மாத கால பயிற்சி நெறியானது
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை அபிவிருத்தி நிறுவகத்தில் டோக்கியோ அபிவிருத்தி
கற்கைகள் நிறுவகத்தின் பூரண அனுசரணையுடன் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியானதில்
நாற்பது (40) நாடுகளைச் சேர்ந்த அறுநூறு (600) பயிற்சியாளர்கள்
பங்குபற்றியிருந்ததுடன், மாவட்ட மட்டங்களிலிருந்து மாவட்ட செயலகத்தினூடாக நுண்நிதியுடன்
தொடர்புடைய கணணி மற்றும் ஆங்கில அறிவில் சிறப்புத் தேற்சிபெற்ற திவிநேகும (சமுர்த்தி) முகாமையாளர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன்
, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மூன்று முகாமையாளர்கள் தெரிவு
செய்யப்பட்டிருந்தனர்.
அவ்வாறாக
தெரிவுசெய்யப்பட்டு நடாத்தப்பட்ட பயிற்சிநெறியானதில் இலங்கை சமுர்த்தி
அதிகாரசபையின் (14) பதினான்கு உத்தியோகத்தர்கள் சித்தியடைந்ததுடன், வடகிழக்கு
மாகாணத்தின் எட்டு மாவட்டத்திற்கும் பெருமைசேற்குமுகமாக தமிழ் பேசும் உத்தியோகத்தராக எமது மட்டக்களப்பு
மாவட்டத்தின் சார்பில் பங்குபற்றிய மண்முனை வடக்கு திவிநேகும (சமுர்த்தி) மகாசங்க
முகாமைத்துவ பணிப்பாளர் கே.கணேசமூர்த்தி சிறப்பு தேற்சி பெற்றதுடன் பயிற்சியினை
சிறந்தமுறையில் நிறைவு செய்தமைக்கான சான்றிதழினை பெற்றுக்கொண்டதுடன் சர்வதேச ரீதியான சிறப்பு சாதனையாளர் விருதினையும் பெற்று எமது மண்ணிற்கும் நாட்டிற்கும்
பெருமை சேர்த்துத்தந்துள்ளார்.
இவரின்
வெற்றிக்கு காரணமாகவிருந்த நன்றிக்குரியவர்கள் பற்றி கேட்கின்றபொழுது என்னை இயக்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் அதே
வேளையில் என்மீது நம்பிக்கை வைத்து என்னை தெரிவுசெய்த மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி.பி.எஸ்.எம் சாள்ஸ் அம்மணி அவர்களுக்கும் விடயம் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கிய மாவட்டத் திட்டமிடல்
பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் அவர்களுக்கும் ஊக்கம் வழங்கிய மண்முனை வடக்கு
பிரதேச செயலாளர் சீ.கிரிதரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கும் அதேவேளையில் மேலதிக ஊக்கத்தினை வழங்கிய வைத்திய கலாநிதியான தனது சகோதரனையும் மற்றும்
தனது துணைவியாரையும் நினைவுகூர்ந்த அவர் அலுவலகரீதியாக ஊக்கம் வழங்கிய
உதவி முகாமையாளர் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், மகாசங்க நிறைவேற்றுக்குழு
உறுப்பினர்களுக்கும் தன்னைப்பாராட்டி கௌரவித்த இருதயபுரம் சமுர்த்தி வங்கி வலய
உத்தியோகத்தர்களுக்கும் நன்றி கூறுவதாக
தெரிவித்தார்.















