(பேரின்பராஜா சபேஷ்)
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் முறக்கொட்டான்சேனை வாவியில் தடைசெய்யப்பட்ட வலைகளைக் கைப்பற்றியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சட்ட விரோத வலைகள் மீன்பிடிக்காக நேற்று முன்தினமிரவு வாவியில் விரிக்கப்பட்டிருந்த சமயம் அவை திடீர் சுற்றி வளைப்பின் போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மூன்று துண்டு வலைகளே கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் எனினுஇவற்றை யாரும் இதுவரை உரிமை கோரவில்லை என்றும் பொலிஸார் கூறினர்.
சட்டவிரோதமாக, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பாவித்து சூழலுக்கு நாசமேற்படுத்துவோர் மீது தாங்கள் விழிப்புடன் இருப்பதாகவும் ஏறாவூர் பொலிஸார் கூறினர்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













