(சித்தாண்டி நித்தி) சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஸேக்பியரியன் ஆங்கில மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு வித்தியாலய அதிபர் திரு.தி.ரவி தலைமை தாங்கி நடத்தினார்.
கல்குடா கல்வி வலயத்தின் 1AB வகைப் பாடசாலைகளுள் ஒன்றான மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர்களால் 'ஸேக்பியரியன் ஆங்கில மன்றம்' எனும் பெயரில் ஒரு மாணவர் மன்றம் 2013 யூலை 12ஆம் திகதி உருவாக்கப்பட்டது. தரம்-5 தொடக்கம் 13 வரையான மாணவஇ மாணவியரில் சுமார் 60 பேரை முதன்மை அங்கத்தவர்களாகக் கொண்டு தாபிக்கப்பட்டுள்ள இம்மன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ 'திறமைகளின் வெளிப்பாடு' இன்று பாடசாலையின் நல்லையா அரங்கில் இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் திரு.தி.ரவி அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் பாடசாலையின் ஆங்கில பாடத்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட இம்மன்றமானது மாணவியான செல்வி.கிசாநிதி பரசுராமன் அவர்களால் தலைமை தாங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாடசாலையின் ஆங்கில பாடத்துறைக்கு தலைமை வகிக்கும் பாட இணைப்பாளரான திருதே.குகதாசன் (ஆசிரியர்) அவர்களினதும் ஆங்கில மன்றத்தின் பிரதம நெறிப்படுத்துநர் செல்வி.சா.பிரபாஜினி (ஆசிரியை) அவர்களினதும் ஏற்பாட்டில்; அனைத்து ஆங்கில ஆசிரியர்களும் இணைந்து நெறிப்படுத்திய மாணவர்களது நிகழ்ச்சிகள் இன்று அரங்கேற்றப்பட்டன. பாடசாலையின் அழகியல்இ விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடத்துறைகளின் தலைவர்களது வழிநடத்தலில் அத்துறைகளும் இன்றைய விழாவுக்கு தொழில்சார் நுட்பங்களை வழங்கி அணிசேர்த்தன.
குறித்த நிகழ்ச்சிகளுள் ஒன்றான சபையோருடனான திறந்த கலந்துரையாடலின் போது வருகை தந்திருந்த விருந்தினர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பார்வையாளர்கள்; மாணவர்களுடன் ஆங்கில மொழியில் உரையாட வாய்ப்பளிக்கப்பட்டது. மன்றத்தின் பிரதான குறிக்கோளான 'மாணவர்களின் ஆங்கில மொழி பேச்சுத் திறன்' சாத்தியமாகியுள்ளமை இதன்போது மெய்ப்பித்துக் காட்டப்பட்டது. இந்நிகழ்வை நடத்துவதற்கான அனுமதி கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் திரு.செ.ஸ்ரீ கிருஷ;ணராஜா அவர்களால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருமதி.சு.குலேந்திரகுமார் (கல்குடா வலய பிரதி கல்விப் பணிப்பாளர்) அவர்களும் கௌரவ அதிதிகளாக ஜனாப்.நிபால் அலாவுதீன் (யுனிசெப் மட்டக்களப்பு அலுவலக பொறுப்பதிகாரி)இ கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான திரு.பொ.சிவகுருஇ திரு.ந.குணலிங்கம்இ இப்பாடசாலையில் முன்பு அதிபராக பணியாற்றியவரும் தற்போதைய கல்குடா வலய ஆசிரிய நிலைய முகாமையாளருமான திரு.வ.பஞ்சலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலையின் அபிவிருத்திக்குழு, பெற்றோர்கள், படசாலை நலன்விரும்பிகள், பொது அமைப்புகள் பலரும் கலந்துகொண்டனர்.
காலை 09.00 -11.30 வரை இடம்பெற்ற ஆடல்இ பாடல்இ பேச்சுஇ நாடகம்இ கவிதைஇ கலந்துரையாடல் முதலிய வடிவங்களிலான இன்றைய நிகழ்வுகள் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைவதுடன் சித்ததாண்டி-மாவடிவெம்பு பிரதேச இளைஞர்களின் 'பேச்சு ஆங்கிலம்' என்ற கனவை நனவாக்க பெரிதும் உதவும் எனவும் பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)











