(உ.உதயகாந்த்)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான மார்க்கத்தின் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதான வளைவில் கடந்த (28) அதி காலை வேளையில் பஸ் வண்டியொன்று கட்டுப்பாட்டினை இளந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான பஸ் வண்டியானது (27) மாலை முல்லைத்தீவிற்கும் அக்கரைப்பற்றிற்கு இடையிலான பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு அக்கரைபற்றை நோக்கி வரும் வேளையிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தானது பஸ் வண்டி கட்டுப்பாட்டினை இளந்த நிலையில் வீதியினை விட்டு விலகி அருகிலுள்ள தற்காலிக வீட்டில் மோதியுள்ளது. விபத்தில் எந்தவிதமான உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்பதை சம்பவ இடத்திலிருந்தும் விசாரணைகளை மேற்கொள்ளும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தினூடாகம் உறுதிப்படுத்தப்பட்டது.












