தைப் பொங்கல் கலாசார விளையாட்டு விழா.


(மா.சசி)

இருநூறுவில் ராஜா இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று தைப் பொங்கல் விளையாட்டு விழா இடம்பெற்றது.

வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இளைஞர் யுவதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச மட்ட தைப் பொங்கல் கலாசார விளையாட்டு விழாவில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றது.

முதியவர்கள், இளைஞர்கள்,சிறுவர்கள் என வயதடிப்படையில் ஆண்,பெண் இருபாலாருக்கும் இடம்பெற்ற இப் போட்டியில் வவுணதீவுப் பிரதேசத்தில் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

ராஜா இளைஞர் கழக ஆலோசகர் இ.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் மண்முனை மேற்கப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார்,உன்னிச்சை பாடசாலை அதிபர் த.வினாயகமூர்த்தி,மண்முனை மேற்கு இணக்க சபை தவிசாளர் வ.புஸ்பாகரன்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் செ.சுசி,கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சி.கிருஸ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.