மழை காலங்களில் பரவும் டெங்கு மற்றும் தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு மட்டக்களப்பு நகரில் பிரதான வீதிகள், கான்கள் மற்றும் வீதியில் உள்ள மரக் கிளைகள் என்பவற்றை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் மாநகரசபையினால் இன்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் . உதயகுமார் தலைமையில் மாநகர சபை நிர்வாக ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
நீர் தேங்கி நிற்கும் வடிகான்கள் சீர் செய்ததோடு நீர் நிறைந்து நிற்கும் குழிகளும் மூடப்பட்டு துப்பரவு செய்யப்பட்டதோடு வீதியின் அருகில் வளர்ந்துள்ள புல் பூண்டுகளும் அகற்றப்பட்டன.
காலை 6 மணிமுதல் 9 மணி வரையும் இடம்பெற்ற இப்பணியில் சிசிலியா பெண்கள் பாடசாலை வீதி, புனித மிக்கேல் வீதி, ஆனைப்பந்தி வீதி, சென் மேரிஸ் வீதி வரை இடம்பெற்றன.
நகரைத் துப்பரவாக வைத்திருக்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வோரு வார செவ்வாய்க்கிழமைகளில் காலையில் இவ்வேலைத்திட்டங்களை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.












