(மா.சசி)மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை விக்னேஸ்வரா வித்தியாலய அதிபரை மாற்றக் கோரியும் கணிதபாட ஆசிரியர் நியமிக்கக் கோரியும் இன்று காலை பாடசாலை கேற்ரை மூடி பெற்றோரும் மாணவர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் பாடசாலை கல்வி வளர்ச்சியில் அக்கரை அற்றுக் காணப்படுவதாக தெரிவித்தே அதிபரை மாற்றம் செய்து வேறு ஒருவரை நியமிக்குமாறும் நீண்ட காலமாக கணிதபாட ஆசிரியர் இல்லாததினால் 6ஆம் ஆண்டு முதல் 11அம் ஆண்டு வரையான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அதனால் உடனடியாக கணிதபாட ஆசிரியர் நியமிக்குமாறும் கோரியே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை அபிவிரத்திச் சங்கம்,கிராம அபிவிரத்திச் சங்கம்,கிராம அமைப்புக்கள் இணைந்து மேற்கொண்ட இவ் ஆர்பாட்டத்தில் பெற்றார்கள்,பழைய மாணவர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற வலயக் கல்விப் பணிப்பாளர் கெ.பாஸ்கரன் அதிபரை மாற்றம் செய்வதுடன் கணிதபாட ஆசிரியரை நியமிப்பதாகவும் வழங்கிய உறுதிமொழியினை அடுத்து ஆர்பாட்டம் கைவிடப்பட்டது.
இதே வேளை கிழக்கு மாகாண சபை உறுப்பின் இரா.துரைரெட்ணம் சம்பவ இடத்துக்கு சென்றமையம் குறிப்பிடத்தக்கது.

































