
Ravindramoorthy)
கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் 21.01.2014 அன்று நடைபெற்ற நெஸ்லே நிறுவனத்தின் 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய விற்பனை விருது வழங்கள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய
நெஸ்லே வினியோகத்தரான விஜேய் கொன்ஸ்ரக்ஷன் நிறுவனத்திற்கு "சிறந்த நெஸ்லே வினியோகத்தர்" தேசிய விருது வழங்கப்பட்டது.
நெஸ்லே நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் கணேசன் அம்பலவாணர் மற்றும் நெஸ்லே நிறுவனத்தின் இலங்கைக்கான உப தலைவர் சந்ன பெனாண்டோ ஆகியோரால் வழங்கப்பட்ட இவ் விருதினை விஜேய் கொன்ஸ்ரக்ஷன் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் வி.றஞ்சிதமூர்த்தி பெற்றுக் கொண்டார். இவ் விருதுடன் பணப் பரிசும், வெங்ஹோக் சென்று வருவதற்கான விமான சீட்டும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.














