தன்னாமுனையை சேர்ந்த மரியதாசன் சூசைதாசன் சமாதான நீதவானாக நியமனம்

இலங்கை சனநாயகசோசலிசக் குடியரசின் மட்டக்களப்புமாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச பிரிவுக்கு உட்பட்ட தன்னாமுனை கிராமத்தை சார்ந்த திரு. மரியதாசன் சூசைதாசன் என்பவர் 2014.01.21 திகதி அன்று சமாதான நீதவானாக சத்தியப் பிரமானம் செய்துள்ளார்.

தன்னாமுனைபுனிதவளனார் வித்தியாலயத்தின் பழையமாணவரும் '“PPCC'என்னும் நிறுவனத்தில் உளவள ஆலோசகராகவும் ,மட்டக்களப்பு மாவட்டத்தின் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் தலைவராகவும், இலங்கை தேசிய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் உப பொருளாளராகவும் பணியாற்றிக் கொண்டுவருவதுடன் தன்னாமுனை புனிதவளனார் வித்தியாலயத்தின் பழையமாணவர் சங்கத்தின் உப செயலாளாராகவும் பணியாற்றிக் கொண்டுவருகின்றார். மற்றும் தன்னாமுனை கிராம அபிவிருத்திசங்கத்தின் முன்னாள் உப செயலாளராகவும் பணியாற்றியதுடன் தற்போது பல்வேறுபட்ட சமூக சமயபணிகளிலும் ஈடுபட்டுவருகின்றது குறிப்பிடப்பட்ட விடயமாகும்