மட்டக்களப்பில் இயற்கை சரித்திரமும் மற்றும் விஞ்ஞான தொல்பொருள் காட்சியகமும் திறந்து வைப்பு


(சிவம்)
இயற்கை சரித்திரமும் மற்றும் விஞ்ஞான தொல்பொருள் காட்சியகமும் மட்டக்களப்பு மாநகர வாசிகசாலை வளாகத்தில் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

விஞ்ஞானத் துறையில் ஆறிவியல் மற்றும் தேடல்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இக்காட்சியகம் ஒரு களமாக அமையும்.

இந்நிகழ்வு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அறிவையும் மற்றும் செயல்முறைகளையும் எமது துறைசார் கல்வியியலாளர்கள் ; பெறும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள 'விஞ்ஞான மாலுமிகள்'  அமைப்பின் தலைவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிட்சை நிபுணருமான . கே. அருள்நிதி தலைமையில் இடம்பெற்றது.

இருதய சத்திர சிகிட்சை நிபுணர் காட்சிப்படுத்துள்ளவைகளைப் பற்றி அதிதிகளுக்கு விளக்கமளித்தார்.

மாவட்ட அரச அதிபர் பி.எஸ். ஏம். சாள்ஸ் பிரதம அதிதியாக கலந்து காட்சியகத்தை திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிட்சை நிபுணர். கே. அருள்நிதி காட்சிப்படுத்துள்ளவைகளைப் பற்றி அதிதிகளுக்கு விளக்கமளித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம். உதயகுமார், மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தா பிரபாகரன், முன்னாள் பிரதி மேயர் ஏ. ஜோர்ஜ்பிள்ளை மற்றும் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.