மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலிருந்து ஆலய நிருவாகத்தினர் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் நேற்று காலை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்களை சந்தித்து தமது கிராம குறைபாடுகள் பற்றி தெரிவித்தனர்.
மேற்படி சந்திப்பு நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் ஆலய கட்டிட புணரமைப்பு, விதி பணரமைப்பு, பொது மயானம் புணரமைப்பு உள்ளிட்ட பலவிடயங்கள் பற்றி கலந்துரையாடினர். இவற்றில் சில விடயங்களை தான் நிறைவேற்றித் தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா மக்களிடம் தெரிவித்தார்.












