கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடத்திற்கு பட்டதாரிகள் நியமனம்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களுக்காக 332 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 81 பட்டதாரிகளுக்கும், திருகோணமலை மாவட்டத்திற்கு 105 பட்டதாரிகளுக்கும், அம்பாறை மாவட்டத்திற்கு 54 பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்காக சிங்களமொழி மூலம் 92 பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வி பாடங்களை கற்பிப்பதற்காக பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.