மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் கலந்துகொண்ட தைப்பொங்கல் விழா

(சிவம்)

லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜையுடன்  இன்று நடைபெற்றது.

பிரதம மந்திரி டி.எம். ஜயரத்தின, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வி. முரளிதரன், லேக் ஹவுஸ் நிறுவன நிர்வாக அதிகாரிகள் மற்றும்  உத்தியோகத்தர்கள்,  மட்டக்களப்பு அரச அதிபர் பி.எஸ். ஏம். சாள்ஸ் , மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தா பிரபாகரன், முhநகர ஆணையாளர் எம். உதயகுமார், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆலய பிரதம குரு இரங்க வரதராஜகுருக்கள் சிவாச்சாரியார்  பூஜைகளை நடாத்தினார்.