கடந்த மாதம் காணாமல் போன வாகனம் கல்முனை பொலிஸாரினால்; திங்கட்கிழமை கைப்பற்றப்பட்டதுடன் அதனை செலுத்திய சாரதியும் கைதுசெய்யப்பட்டார்.
இதுதொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த EP-LH 8525 இலக்கத் தகடை கொண்ட டிப்பர் ரக வாகனம் களவு போனதாக அதன் உரிமையாளர் முகம்மது இஸ்மாயில்அப்துல் ரஹீம் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த களவு சம்பந்தமாக கல்முனை பொலிஸ் தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கபார் தலைமையிலான பெருங்குற்ற தடுப்பு பொலிஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் பயனாக குறித்த வாகனம் LH- 8034 எனும் போலி இலக்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை 5ஆம் திகதி இங்கினியாகல பகுதியில் வைத்து கைப்பற்றப்ட்டது.
இவ் வாகனத்தில் இலக்கத் தகடு மிகவும் தொழில்நுட்பத்துடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், போலி இக்கத்துக்குரிய வாகனமும் விரைவில் கைப்பற்றப்படும் எனவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.












