(உ.உதயகாந்த்)
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் தற்காலிக கடைகளை மாநகர சபையின் அனுமதியின்றி நிறுவி வியாபாரத்தில் ஈடுப்படுவது மட்டுமல்லாது பல வீதி விபத்துக்களிற்கும் வழியமைத்துக்கொடுப்பதுடன் அழகிய மட்டு நகரின் அழகிற்கு பங்கம் விளைவிக்கும் வண்ணமாக அமையப்பெற்றுள்ளமையினை கருத்திற்கொண்டு இவ்வாறான கடை தொகுதிகளை அகற்றும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக கல்லடி சந்தை தொகுதியில் சில சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டன.
இச் செயற்பாடானது புதிதாக மாநகர ஆணையாளராக கடமையேற்றுள்ள எம்.உதயகுமாரின் ஆலோசனைக்கு அமைவாக கல்லடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
கல்லடி
பிரதேசத்தை அழகுபடுத்தும் நோக்குடனும், வீதி வியாபாரங்களைத் தடுக்கும் நோக்குடனும் கல்லடி சந்தைத்
தொகுதியில் மேலும் பல வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் சுமார் பதினைந்து வருடத்திற்கு மேற்பட்ட அனுமதியற்ற, சட்டவிரோதமான தற்காலிக கட்டிடங்கள்
அனைத்தும் அகற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.












