பாண்டிருப்பு முதலாம் குறிச்சி நெசவு நிலைய வீதியைச் சேர்ந்த பாக்கியசெல்வம் புவிராஜா என்பவர் கடந்த 08.01.2014 திகதி அன்று கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி திரு. யு. யூட்சன் முன்னிலையில் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் அம்பிளாந்துறையூர் கலைமகள் மகா வித்தியாலயம், பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் தேசியபாடசாலை, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரனின் இணைச் செயலாளராகவும் இருப்பதோடு சமூக சேவையில் முன்னின்று உழைப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












