வந்தாறுமூலை மருங்கையடி சித்தி வினாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வு


(சித்தாண்டி-நித்தி) வந்தாறுமூலை மருங்கையடி ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் தைத்திரு நாளை முன்னிட்டு பொங்கல் நிகழ்வுகள் ஆலயத்தின் சிவஸ்ரீ ஜெயக்குமார் ஐயாவினால் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இன்று (14.01.2014) அதிகாலையிலே வினாயகர் வழிபாட்டுடன் சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து வினாயகப் பெருமானுக்கும் விசேட பூசைகள் நடைபெற்றதுடன். காலைவேளையிலே ஆலய வழிபாட்டுக்கு அதிகமான பக்தர்கள் வருகைதந்து தைத்திருநாள் பூசையில் கலந்துகொண்டனர்.