புதிய வருடப் பிறப்பில் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உதவி வழங்கிவைத்தார் பாராளுமன்ற உறுப்பினர்

( ரவி & சுரேந்திக்கா )
புதிய வருடம் பிறந்து வெளிக் கிராமத்திற்குச் சென்று முதலாவது மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு ஒருதொகுதி பிளாஸ்டிக் கதிரைகளை இருட்டுச்சோலைமடு மக்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்கள் கையளித்தார்.

மேற்படி நிகழ்வு இன்று காலை வவுணதீவு பிரதேசத்திலுள்ள இருட்டுச்சோலைமடு கிராமத்தில் மாதர் அபிவிருத்திச் சங்க தலைவி சிந்துஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த வருடம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள காயான்காடு கிராமத்தில் பிள்ளையார் ஆலயத்திற்கு ஒலிபெருக்கி ஒன்றினை வழங்கும் நிகழ்வில் இருட்டுச்சோலைமடு மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர் தமது சங்கத்திற்கு கதிரைகள் வழங்குமாறு கோரியிருந்தனர். அதற்கமைய அச் சங்கத்திற்கு அக் கதிரைகள் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்களால்
பெற்றுக்கொடுக்கப்பட்டது.

இதன்போது மாதர் அபிவிருத்திச் சங்க தலைவி சிந்துஜா, சங்க உறுப்பினர்கள், பிள்ளையார் ஆலய தலைவர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தாங்கள் கோரியதற்கமைய பொருட்களை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினருக்கு மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர் நன்றியைத் தெரிவித்தனர்.