
மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் குறித்த வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான பழைய மாணவர்களின் அனுசரணையுடனான செயற்றிட்டம் கடந்த புதன்கிழமை பிற்பகல் பாடசாலையில் பாடசாலை அதிபரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வகுப்பில் கணிதம், விஞ்ஞானம்,ஆங்கிலம்,தமிழ்,இவரலாறு ஆகிய பாடங்கள் விசேட ஆசிரியர்களால் கற்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான நிதி அனுசரணையினை ஐரோப்பாவில் வாழும் பாடசாலையின் பழைய மாணவர்கள் வழங்குவது குறிப்பிடத்தக்கது.














