சிறு நீர்ப்பாசனக் குளம் அசுத்தமடைகின்றது.

 (சூரியன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட படுவான்கரைப் பகுதியின் கோவில்போரதீவில் அமைந்துள்ள சிறு நீர்ப்பாசனக் குளத்தினுள் பொதுமக்கள் கழிவுகளைக் கொண்டுவதனால் குளம் அசுத்தமடைந்து வருவதுடன் கழிவுகளால் நிரம்பி வருவதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றர்.
இந்தக்குளத்து நீரை நம்பியே விவசாயிகள் காலபோக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் கழிவுகளைக் இந்தக் குளத்தினுள் கொட்டுவதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து , குளத்தினைப் புணரமைப்புச் செய்யவும் சம்மந்தப்பட்டவர்கள் உடன் முன்வர வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றர்.