றோட்டரிக்கழகத்தின் எற்பாட்டில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

(படுவான் பாலகன்) 
மட்டக்களப்பு ROTARY கழத்தின் அனுசரணையுடன், மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலமும் இணைந்து நாடத்திய பட்டிப்பளைப்பிரதேசமக்களுக்கான தொற்றாத நோய்கள் தொடர்பான இலவச வைத்திய முகாம் மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று 2014.01.26ம் திகதி மகிழடித்தீவுசுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். E.சிறிநாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட அறுவைச் சிகிச்சை நிபுணர் டொக்டர் தம்பாவட்ட தலைமையிலான வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் Dr.ராஜேந்திரா, Dr.மயூரன், Dr.கிரிதரன், Dr.ரதிசன் மற்றும் இன்னும் பல வைத்தியர்களும், கலந்து மக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

இவ் வைத்தியமுகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.