மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்கான நெஸ்லே நிறுவனத்தின் பிரதேச விற்பனை முகாமையாளராக கடமையாற்றிய ஆ.விஜயகுமார் 2013 ஆம் ஆண்டிற்கான 'சிறந்த பிரதேச விற்பனை முகாமையாளர்' எனும் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் 21.01.2014 அன்று நடைபெற்ற நெஸ்லே நிறுவனத்தின் தேசிய விற்பனை விருது வழங்கள் நிகழ்வின் போது நெஸ்லே நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் கணேசன் அம்பலவாணர் மற்றும் நெஸ்லே நிறுவனத்தின் இலங்கைக்கான உப தலைவர் சந்தன பெனாண்டோ ஆகியோரால் இவ் விருது வழங்கிவைக்கப்பட்டது.













