(மா.சசி)
மட்டக்களப்பு சமூக விழிப்புணர்வு மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் மட்டக்களப்பில் உள்ள தோழுநோயாளர்களுக்கான விசேட ஒன்றுகூடலும் கலை நிகழ்வும் நடாத்தப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள சுமார் 40 தொழுநோயாளர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.இதன்போது இவர்களது கலை நிகழ்வு இடம்பெற்றதுடன் இவர்கள் அனைவருக்கம் பரிசுப்பொதிகளும் வழங்கப்பட்டது.
தொற்று நோய்ப் பிரிவுக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி.மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம்,பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான்,தொற்றுநொய்ப் பிரிவு வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி ஜி.கௌரிபாலன்,மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி.தேவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












