கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரத்ததான முகாம்

கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினரின் அனுசரணையுடன் கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்ட வருட இறுதி இரத்ததான முகாம் கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா கலையரங்கத்தில் 31.12.2013 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினரின் அனுசரணையுடனான சுழற்சி முறையிலான இரத்ததானம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இவ்வருடத்தில் நான்காவது தடவையாக இந்நிகழ்வினை நடாத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ் இரத்ததான முகாமில் மாணவர்கள் தவிர்ந்த கல்விசார், கல்விசாரா உத்தியோகத்தர்களென நுற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இவ்வாறான தொடர் இரத்ததான முகாமானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்தவங்கியின் நாளாந்த செயற்பட்டுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளதாக இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினரின் தொடர்ச்சியான அனுசரணையுடன் நடைபெறும் இவ்வாறான நிகழ்வுகள் பல்கலைக்கழக சமூகத்தின் கமூகம்சார் ஈடுபாட்டின்; வெளிப்பாடு என பலரும் வரவேற்றுள்ளனர். மேலும்இந்நிகழ்வில் சர்வதேச லயன்ஸ்கழக 306 - ஊ2 பிரதேசம்- 08, வலயம் 02ன் தலைவர் லயன் பாஸ்கரன் உட்பட கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழக உறுப்பினர்களும, மாணவர் ஒன்றிய உறுப்பினர்களும்; கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.