விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சந்திரகாந்தன் Ex cm

விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சந்திரகாந்தன்

தொழில்களிலே அனைவருக்கும் உணவு வழங்குகின்ற விவசாயிகளின் புனிதநாளாக இந்தத் தைப்பொங்கல் நிகழ்வு காணப்படுகின்றது. இந்த இனியநாளில் உழவர்கள் தமது உழவுத் தொழிலுக்கு துணைபுரியும் சூரியனுக்கு நன்றி தெரிவித்து இந்தபொங்கல் நிகழ்வை கொண்டாடுகின்றனர்.
கடந்தவருடத்தின் இறுதியில் பருவமழைகுறைவாகக் கிடைத்தபோதிலும் தற்போது கிடைத்துக்கொண்டிருக்கும் குறைந்தளவிலான மழையாவது விவசாயநிலங்களுக்கு போதுமாளவுகிடைப்பதுடன், உணவுவழங்கும் விவசாயிகளின் பொரளாதாரமும் மேம்படவேண்டும்.
இந்த இனியநாளில்  தைப்பொங்கல் நிகழ்வினைக் கொண்டாடுகின்றஅனைத்துமக்களுக்கும் எனதுதைப்பொங்கல் வாழ்;த்துக்களைத் தெரிவிப்பதில் மனமகிழ்வடைகின்றேன்.

சிவனேசதுரை–சந்திரகாந்தன்
(முன்னாள் முதல்வர்,கிழக்குமாகாண சபை உறுப்பினர், ஜனாதிபதியின் ஆலோசகர்)