(Battinews Toronto correspondent ) தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான எங்கள் முதன்மை ஆசான் அமரர் வித்துவான் க.செபரெத்தினம் ஐயாவின் ஈமைக்கிரியைகள் நேற்று சனிக்கிழமை காலையில் நல்லடக்க தேவ ஆராதனைகளுடன் Chapel ridge funeral ஆலயத்தில் ஆரம்பித்து பல சமயத்தலைவர்கள் பேராசிரியர்கள் , பழுகாமம் கனடாமக்கள் தமிழ் அறிவாளர்கள் உரையின் பின்னர் ஊர்வலமாக வித்துவான் க. செபரெத்தினம் ஐயாவின் பூதவுடல் ஊர்வலமாக Toronto Markham Scarborough நகர வீதிகளூடாக எடுத்து இறுதியாக Christ the king catholic cemetery சென்றடைந்தது. நல்லடக்கம் நண்பகல் 12.30 கிறிஸ்தவ சமய முறைப்படி பாதிரியார் தலைமையில் இனிது நடந்தேறியது .
கனடா குளீர் கால நிலையையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான மக்கள் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர் .
க.செபரெத்தினம் ஐயாவின் உடல் இந்த உலகை விட்டு சென்றாலும் அவர் தமிழ் உலகிற்கும் , மட்டக்களப்பு , பழுகாமம் மக்களும் செய்தசேவை எங்கள் நெஞ்சங்களை விட்டு நீங்காது .
அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.
சிவம் விநாயகமூர்த்தி
(திருப்பழுகாமம்)
கனடா



















