கல்முனை HNB வங்கியினால் முதியோர் சங்கத்திற்கு உலர்உணவு பொதிகள் வழங்கிவைப்பு

(தில்லை)
கல்முனை கற்றன் நெசனல் வங்கியின் சமூகசேவை நலத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பல சேவைகளை செய்து வருகின்றது அதனடிப்படையில் இவ்வாண்டிற்கான நிதிஒதுக்கீட்டினை  கல்முனை சிரேஸ்ட பிரஜைகள் குழு (முதியோர் சங்கத்திற்கு) ஒரு இலட்ச்சத்து இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான  உலர்உணவு பொதிகளை வழங்குவதற்காக பிரஜைகள் குழுத்தலைவர் தலமையில் கல்முனை பல்தேவைக்கட்டிடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு கற்றன் நெசனல் வங்கியின் பிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.ஆறுமுகன், கல்முனை வங்கி முகாமையாளர் எஸ்.எம்.எம்.பலீல் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட முதியோர்கள் கழந்து கொண்டுஇருப்பதனையும் மலர்மாலை அணிவித்து அதிதிகள் வரவேற்க்கப்படுவதனையும,; அதிதிகள் விளக்கேற்றுவதனையும் முதியோர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைப்பதனையும் படத்தில் காணலாம்.