(சிவம்)மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் 2014 ஆண்டிற்காக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு சின்னங்கள் மற்றும் சாண்றிதழ்கள் வழங்கு;ம் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஆர். கனகசிங்கம் தலைமையில் பாடசாலையின் குறோவ்ட் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதல்நிகழ்வாக மாணவர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியக் கலாநிதி கஜமுதி தமிழ்வாணன் கலந்து கொண்டு சின்னங்களைச் சூட்டினார்.
இதன் போது பாடசாலையில் கடந்த ஆண்டில் (2013) கடமையாற்றிய மாணவ தலைவர்களுக்கு சேவைச் சாண்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















