மட்டக்களப்பு மாநகர சபையில் 66வது சுதந்திர தின நிகழ்வுகள்

(வரதன்,சிவம்  )

இலங்கையின் 66 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் மாநகர ஆணையாளர்  மா.உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது .முதலில் தேசிய கொடியேற்ற ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு அதன் பின்னர் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆணையாளர் தமது உரையில் நாம் இன்று கொண்டாடும் சுதந்திர தின நிகழ்விற்கு எமது முன்னோர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் அத்திவாரங்களாக அமைவதுடன் எமது சேவைகளூடாக நாம் பொதுமக்களுக்கு உரிய கௌரவத்தையும் மரியாதையையும் வழங்க முடியும். இது எமது சுதந்திர தின உறுதிப்பாடாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர் என். தனஞ்செயன், கணக்காளர் ஜி.எச். சிவராசா, பொறியியலாளர் பி. அச்சுதன்  மற்றும்
மாநகர சபையின் அலுவலர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.