(R.Sayan ) இலங்கையில் வாழ்வாதரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னின்று உழைக்கும் வங்கியான பிரதேச அபிவிருத்தி வங்கி மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள் . அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்ற திவிநெகும திட்டங்களெல்லாம் இவ் வங்கியூடாக நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றது .
கடந்த 2011 ஆம் ஆண்டு பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது கிளையினை மட்டக்களப்பு நகரில் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆரம்பித்து வைத்திருந்தார் .வாடிக்கையாளர்களின் நலன்கருதி பிரதியமைச்சர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு அமைவாக கிழக்கு மாகானத்திற்கு தனி பிராந்திய அலுவலகம் ஓன்று திறக்கப்படவிருக்கிறதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் தெரிவித்தார் .
மேலும் தெரிவிக்கையில்
முன்பு கிழக்கு மாகாணம் ஊவா மாகான பிராந்திய அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது தற்போது பிரதியமைச்சர் முரளிதரனின் முயற்சியால் கிழக்கில் திறக்கப்பட இருப்பதுடன் இதனால் தொழில் வாய்ப்புகள் மாத்திரமின்றி .மக்களுக்கு கடன் வசதிகள் தாமதமின்றி விரைவாக பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் கிரான், வாகரை பிரதேசங்களில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிளைகள் திறப்பதற்கான அனுமதியும் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராள் அவர்கள் பெற்றுகொடுத்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் தெரிவித்தார் .












