(வரதன்)
புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி மாசிலாமணி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் வின்சென்ற் மகளீர்தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி ரா.கனகசிங்கம் பெற்றார்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்இங்கு வினோத உடைப் போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.வெற்றிபெற்ற இல்ல மாணவர்களுக்கு அதிதிகளாலபரிசுக்கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மட் நகரின் பிரதான பாடசாலைகளின் மாணவர்களின் விளையாட்டுத் திறன் விருத்திக்கான செயற்பாடுகள் மழுங்கடிக்கப் பட்டிருப்பதற்கு காரணம் விளையாட்டு மைதானம் இன்மையே வெபர் மைதானம் நவீனவசதிகளுடன் புனரமைக்;கப்படுகின்ற போதிலும் அதனைப்பயன்படுத்திய பாடசாலைகளுக்கு வேறு மைதான வசதிகளை இதுவரைக்கும் இங்குள்ள அமைச்சர்கள் அரசியல் தலைமைகள் அரச உயர் அதிகாரிகள் பாராளமன்ற மாகாணசபை உறுப்பினர்கள் ஏற்படுத்திக் கொடுக்காமை இப் பாடசாலை மாணவர்களின் உள வள ஆற்றல் கற்றல் செயற்பாடுகளை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளதாக அதிபர்கள் மாணவசமூகம் பெற்N;றார்கள் கல்விமான்கள்ஆகியோர் தமது கண்டனத்தை தெரிவிக்கின்றனர்




















