(சிவம்,வரதன் )இலங்கையின் 66 ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றன.
காலை 8. 50 மணிக்கு தேசியக் கொடியை மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான பி; .எஸ். எம். சாள்ஸ் ஏற்றி வைத்தார்.
பின்பு தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ். எம். சாள்ஸ் தலைமையில் ஆரம்பமான நிகழ்விலமும்மதத் தலைவர்களின் ஆசியுரையினை தொடர்ந்து அரசாங்க அதிபர் உரையாற்றினார்.
உதவி அரசாங்க அதிபர் எஸ். ரங்கநாதன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர். இளஞ்செளியன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் இதில் பங்கேற்றனர்.

















