புதிய இடமாற்றம் பெற்று வந்துள்ள பழைய மாணவர்கள்

 (வரதன்)

கற்ற பாடசாலைக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மட்டு மாவட்டத்தில் முதல் தடவையாக அதிக தேவைப்பாடுகளுள்ள அலுவலகங்களில் இடமாற்றம் பெற்று வந்த அதிகாரிகளின் வரிசையில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் முன்னாள் மாணவரான வி.தவராஜா மண்முனை வடக்குப் பிரதேச செயலாளராகவும் மட்டக்களப்பு மத்திய கல்லூரி பழைய மாணவரான எம். உதயகுமார் மாநகர ஆணையாளராகவும் மற்றும் மட்-புனித மிக்கேல் கல்லூரி பழையமாணவரான எஸ்.கிரிதரன் பதில் அரசாங்க அதிபராகவும் கடமையாற்றுகின்றமை பாடசாலைக்கு பெருமை சேர்ப்பதோடு கற்பித்த ஆசிரியர்களுக்கும் காணிக்கை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது .இதே வேளை இவர்கள் கடமையாற்றும் அலுவலகங்கள் நகரின் மையப் பகுதியில் அருகருகே அமைந்துள்ளமை அதற்கு அழகு சேர்க்கின்றது . இவர்களின் வளர்ச்சிமாவட்டத்திலுள்ள மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் பெருமைமிகு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது.