கிழக்கு மாகாண சபை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களை திட்டமிட்டு புறக்கணித்துவருகின்றனர்

(பேரின்பராஜா சபேஷ்)

கிழக்கு மாகாண சபை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களை திட்டமிட்டு புறக்கணித்துவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம்குமத்தியுள்ளார்;. போட்டிப் பரீட்சைகளில் சித்திபெற்ற போதிலும் நியமனங்களைப் பெற்றுக்கொள்வதில் தமிழர்கள் திட்டமிட்டமுறையில் புறக்கணிப்பாபடுகிறார்கள் என்றும் அவர் கூறினார். பேரின்பராஜா சபேஷ்
கிழக்கு மாகாண சபை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களை திட்டமிட்டு புறக்கணித்துவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம்குமத்தியுள்ளார்;.


போட்டிப் பரீட்சைகளில் சித்திபெற்ற போதிலும் நியமனங்களைப் பெற்றுக்கொள்வதில் தமிழர்கள் திட்டமிட்டமுறையில் புறக்கணிப்பாபடுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிபபிட்டார்

பாடசாலை அதிபர் எஸ்.சேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுபா சக்கரவர்த்தி, உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் கே.டேவிட், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர்கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தொடர்ந்து உரையாற்றுகையில்

 'இந்த நாட்டிலே யுத்தம் ஆரம்பிக்கப்பட முன்னர் தமிழர்கள் கல்வியில் உயர்த நிலையில் உள்ளார்கள் அவர்களது கற்றல் ஆற்றலை அழிக்க வேண்டும் என்பதற்காக யாழ்பாண நூலகத்தை எரித்தார்கள்.

கிழக்கு மாகாணத்தில் கல்வி ரீதியாக ஒடுக்கப்படும் துர்ப்பாக்கிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அண்மையில்  முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அதிகபடியான புள்ளிகளை தமிழ் பரீட்சாத்திகள் பெற்றார்கள் ஆனால் அந்த பரீட்சை பெறுபெறுகள் மாற்றியமைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் சுமார் 40 பேர் சிங்களவர்களும்  15 பேர் தமிழ்களும் தெரிவுசெய்யப்பட்னர். இதிலே திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் நியமிக்கப்படவிருப்பதோடு 15 தமிழர்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கவுள்ளார்கள் இதுதானா இன விகிதாசாரம்? போட்டிப் பரீட்சையில் கூடிய பெறுபேறுகளைப் பெற்றும் பதவியைப் பெறமுடியாது ஒடுக்கப்படும் இனமாக இன்று கிழக்கு மாகாணத்திலே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இவற்றையெல்லாம் கண்டு நாங்கள் சோர்ந்துவிடவில்லை இந்த அராஜக நடவடிக்கையை எதிர்த்து எமது உரிமைக்காக நாங்கள் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். எமது மக்களின் கல்வி உரிமை மொழி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இதேபோன்று பல திணைக்களங்களில் பெரும்பாண்மை இனத்தை மையமாககொண்டு சிற்றுழியர் நியமனங்கள் நடைபெறவுள்ளன. இதனை தடுக்கும் வகையில் நாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

கிழக்கு மாகாண சபை கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் தமிழர்களை திட்டமிட்டு புறக்கணித்துவருகிறது. இதனை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் பதவிகளைத் தருவதற்கு அவர்கள் தயாராகவுள்ளார்கள் ஆனால் எமது மக்களை விற்று அரச பதவிகளைப் நாங்கள் தயாராக இல்லை எமது மக்கள் செய்த தியாகங்களை ஒருபோதும் நாங்கள் மறந்துவிடமாட்டோம். எமது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம். தமிழ் மக்களுடைய தாயகத்தை அடையாளப்படுத்த வேண்டும் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆழவேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது.


சத்துருக்கொண்டான் மண்ணிலே 1990 ஆண்டிலே பாரிய படுகொலை இடமடபெற்றதை யாரும் மறந்துவிடமுடியாது. எமது உவுகள் 186 பேர் இந்த மண்ணிலே படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை எந்தவித முடிவும் இலலை. அதேபோன்று யுத்தம் காரணமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கு தங்குமிட் கொடுத்து உதவியதும் இந்த சத்துருக்கொண்டான் மண்தான்' என்றார்