மட்டு நகரைக் கலங்க வைத்த குழந்தை ஜர்சிக்காவின் திடீர் மரணம் - (வீடியோ)

 (வரதன்) இறைவன் தந்த செல்வங்களில் பெறுமதி மிக்க செல்வம் குழந்தைச் செல்வம் புpறந்த தினம் முடிந்து 40 நாட்களில் பின் இறைவன் மீண்டும் அழைத்த சம்பவம் மட்டு நகரில் கடந்த 21.02.2014.அன்று பதிவாகியது.

திரு திருமதி விருத்தாச்சலம் தம்பதிகளின் புதல்வி ஜர்சிக்கா இவரின் திடீர் மரணம் மட்டு நகரைக் கலங்க வைத்துள்ளது. கொடுப்பதும் எடுப்பதும் இறைவன் செயல் இருப்பினும் பெற்றோர் சகோதரர்கள் உறவினர்களிடம் உறவாடிய குழந்தை உயிர்ப்பின் உறைவிடத்தில் உறங்குவதை யாரால் தான் தாங்கிக் கொள்ள முடியும். குழந்தையின் நல்லடக்கம் 23.02.2014 அன்று மாலை தாண்டவன்வெளி காணிக்கை மாதா தேவாலயத்தல்p திருப்பலி இடம்பெற்றதைத் தொடர்ந்து கள்ளியன்காடு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் ஆசிரியர்கள் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.