மட்டக்களப்பு ஆனைப்பந்தி இராம கிருஸ்ண மகளிர் கல்லூரியில் உயர்தர தொழிநுட்ப பிரிவை அமைப்பதற்கு அனுமதி

(ரவி )
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட ஆனைப்பந்தி இராம கிருஸ்ண மகளிர் கல்லூரியில் விசேட அனுமதியுடன் உயர்தர தொழில்நுட்ப பிரிவினை அமைப்பதற்கு கல்வி அமைச்சர் பந்துலகுணர்வர்த்தன அனுமதியளித்துள்ளார்.

இலங்கை தொழில்நுட்ப கல்வி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பாலசுப்ரமணியம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழில்நுட்ப கல்வி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பாலசுப்ரமணியம் கல்வி செயற்பாடு தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர் மொஹான்லால் கிரேரு ஊடாக கல்வி அமைச்சர் பந்துலகுணவர்த்தனவிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில்நுட்ப கல்வியின் அவசியத்தினை உணர்ந்த பணிப்பாளர் நாயகம்,தொழில்நுட்ப கல்வியை விரிவுபடுத்தும் வகையில் இந்த அனுமதியைபெற்றுக்கொடுத்ததாக தெரிவித்தார்.

பாடசாலை மட்டத்தில் இருந்து தேசிய தொழில்நுட்ப தகமையினை பல்கலைக்கழக மட்டம் வரையில் மேம்படுத்தும் வகையில்  நன்மையடையமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு வலயம்,மட்டக்களப்பு வலயம்,கல்குடா போன்ற வலயங்களில் தொழில்நுட்ப கல்வி பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.