உத்தியோகபூர்வ இலச்சினையினை உருவாக்குதல்! அனைவருக்கும் அழைப்பு.

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிகளை குறிப்பிட்டுக் காட்டும் உத்தியோகபூர்வ இலச்சினையினை  உருவாக்கி எம்மோடு இணைந்துகொள்வதற்கான கௌரவமான அழைப்பதாக வாழ்வின் எழுச்சி திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கை சமுர்த்தி அதிகாரசபை,இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை,இலங்கை உடரட்ட அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய மூன்று அதிகாரசபைகளும் சமுர்த்தி ஆணையாளர் நாயகத் திணைக்களம்,உடரட்ட கிராமிய புனருத்தாபனத் திணைக்களம் உட்பட ஐந்து நிறுவனங்களின் கூட்டாக பொருளாதார அபுவிருத்தி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்ட"வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின்"  பொருத்தமான உத்தியோகபூர்வ இலச்சினை(லோகோ) உருவாக்குவதற்கு இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டம், வாழ்வின் எழுச்சி அடிப்படை சமுதாய கட்டமைப்பினை கட்டியெழுப்புதல், வாழ்வின் எழுச்சி அடிப்படை சமுதாய வங்கி வலையமைப்பினை அபிவிருத்திசெய்தலும் மேம்படுத்தலும் மற்றும் மனிதவள அபிவிருத்தி போன்றன வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் பிரதான பணிகளாகும்.

தெரிவு செய்யப்படும் பொருத்தமான இலச்சினை தயாரித்தவருக்கு(ஆக்கத்திற்கு) ரூபா ஒரு இலட்சம் பரிசாக வழங்கப்படும்.

உருவாக்கப்படும் இலச்சினை "நிறைவான இல்லம் - வளமான தேசம்" என்ற கருப்பொருள் தெளிவாக உருவாக்கப்பட்டிருத்தல் வேன்டும்.

மற்றும் , 4 நிறங்களை மாத்திரம் கொண்டிருத்தல் வேன்டும்.
அத்துடன் இலச்சினை உருவாக்கத்தின் ஒவ்வொரு அடையாளத்தினதும் நிறங்களினதும் விளக்கங்களை தனித்தனியாக எழுத்தில் விபரித்தல் வேன்டும்.

இவ் இலச்சினை 10cm * 10cm (4அங்குலம்*4அங்குலம்) அளவினையுடையதாகவும் JPG Format ஆகவும் அமைந்திருத்தல் வேன்டும் எனவும் றெிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆக்கங்கள் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் ஆக்கத்தின் பிரதி ஒன்றினை divineguma media@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அத்துடன்  இறுவட்டில் உட்படுத்தி( சீடி யில்) பத்தரமுல்ல,வாழ்வன் எழுச்சி திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கவேன்டும்.


இது தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு உங்கள் பகுதியிலுள்ள திவிநெகும(சமுர்த்தி0 வங்கி முகாமையாளர் அல்லது சமுர்த்தி -திவிநெகும உத்தியோகத்தரை தொடர்புகொண்டு விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.