(சித்தாண்டி நித்தி) பேஸ்புக் விவகாரத்தால் நாட்டில் தற்கொலைகள் இடம்பெறுவது கடந்த சில தினங்களில் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான தற்கொலை அதிகரிப்புக்கு காரணம் உரிய முறையில் தேவைக்கு ஏற்ப தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தவில்லை என்பதாகும். இரண்டு சம்வம் அண்மைக்காலத்தில் நடைபெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை அல்பிட்டிய மன்னாங்கொட பகுதியில் 19 யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பேஸ்புக் இணையத் தளத்தில் தன்னுடைய புகைப்படத்துடன் வேறொரு இளைஞனின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை தொடர்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்கும் மாணவி. இவர் சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் இணையத்தளம் ஊடாக யாயெல பகுதியிலுள்ள இளைஞன் ஒருவனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரியவருகின்றது. குறித்த இளைஞன் நேற்று (19.02.2014) அவரின் வீட்டிற்கு வந்திருந்த பொழுதே குறித்த யுவதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். பேஸ்புக் ஊடாக புகைப்படத்தை அனுப்பியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் மற்றுமொரு பேஸ்புக் தற்கொலை சம்பவமாக குருநாகல் ஜோன் கொத்தலாவல பாடசாலை மாணவி ஒருவர் பேஸ்புக்கில் படத்தை பதிவேற்றம் செய்திருந்தமை தொடர்பில் பாடசாலையின் அதிபர் அம்மாணவியை அழைத்து எச்சரிக்கை விடுத்திருந்தார் இதே வேளை அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்வத்தை தொடர்ந்து பாடசாலை அதிபர் கைதிசெய்யப்பட்டு அதிபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவியை திட்டி அவமானப்படுத்தியதற்காகவே பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டிருந்ததார். பாடசாலை அதிபரின் செயற்பாட்டால் மாணவி தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் மாணவி மனோ ரீதியாகவே பாதிக்கப்படிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அந்த மாணவி மனோ ரீதியாகவே பாதிக்கப்படிருந்தார் என பாடசாலை மாணவி ஒருவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறாயினும் தொழிநுட்பத்தின் வருகையினால் அவற்றினை உரிய முறையில் தேவைக்கு மாத்திரம் கையாளவும் நடைமுறைப்படுத்தவும் பயன்படுத்தவும் தெரியாமல் இன்று எமது நாட்டில் இளைஞனர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில் இவ்வாறான தீய செயற்பாடுகளின் காரணமாகவே தற்கொலை முயற்சிகள் அதிகாரித்த வண்ணம் உள்ளது. இவ்வாறு நடைபெற்ற சம்பவங்களை கண்டு எதிர்வரும் சமுகங்களும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது வரவேற்கத்தக்கது.

















